கன்னியாகுமரி மாவட்ட முஸ்லிம் ஜமாஅத் கூட்டமைப்பு சார்பில் 30க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் நாகர்கோவிலில் மாவட்ட ஆட்சியரை சந்தித்து கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர்.
அதில், ”நெல்லை உள்ளிட்ட தென் மாவட்டத்தில் கடைகளை மாலை 7 மணி வரை திறந்து இருக்க அனுமதி வழங்கியது போன்று குமரி மாவட்டத்திலும் கூலித் தொழிலாளர்களின் நலன் கருதி அனுமதி வழங்க வேண்டும்.
தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் இருந்து தனியார் நிறுவனங்கள் பெற்ற கடனை திருப்பி செலுத்த மேலும் நான்கு மாதம் அவகாசம் அளிக்க வேண்டும். வீட்டு வரி, கடை வரி, வணிக வளாகங்கள் வரி மற்றும் திருமண மண்டபங்களுக்கான வரிகளை ரத்து செய்ய வேண்டும்.
தனியார் நிறுவனங்களில் நூறு பணியாளர்கள் பணிபுரிந்து வந்ததில் ஊரடங்கால் 80 பேருக்கு வேலை இழப்பு ஏற்பட்டுள்ளதால் அவர்களுக்கும் நிவாரண உதவிகள் வழங்க வேண்டும்” என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
கடனை திருப்பி செலுத்த அவகாசம் கோரி ஆட்சியரிடம் மனு! - Private companies
கன்னியாகுமரி: தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் தனியார் நிறுவனங்கள் வாங்கிய கடனை திருப்பி செலுத்த 4 மாதம் அவகாசம் கோரி முஸ்லிம் ஜமாத் கமிட்டியின் நிர்வாகிகள் ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
முஸ்லிம் ஜமாத் கமிட்டி