குமரி மாவட்டம் குலசேகரம் அருகே முள்ளம்பாறை விளையில் புதிய டாஸ்மாக் மதுபானக் கடை ஒன்றை திறக்க அரசு முடிவு செய்துள்ளது. இப்பகுதியில அதிகப்படியான குடியிருப்புளும், பள்ளி ஒன்றும் செயல்பட்டு வரும் நிலையில் அரசு எடுத்துள்ள இந்த முடிவு அப்பகுதி மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது.
புதிதாக மதுபானக்கடை திறக்கக்கூடாது: முள்ளம் பாறை மக்கள் மனு - Resistance to open shop
கன்னியாகுமரி: முள்ளம்பாறைவிளை குடியிருப்பு பகுதியில் டாஸ்மாக் மதுபானக் கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து கிள்ளியூர் தொகுதி எம்.எல்.ஏ. தலைமையில் கிராம மக்கள் ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
இந்நிலையில் இந்தப்பகுதிகளில் மதுபானக் கடை திறக்கப்பட்டால் சட்ட ஒழுங்கு பிரச்னை ஏற்படும், பெண்களின் பாதுகாப்பிற்கு உத்திரவாதம் இருக்காது எனவே மதுபானக் கடை திறக்கும் முடிவை அரசு கைவிட வேண்டும் என்பதை வலியுறுத்தி கிள்ளியூர் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ.ராஜேஷ்குமார் தலைமையில் முள்ளம்பாறை விளை கிராம மக்கள நாகர்கோவில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
இதையும் மீறி மதுபான கடை திறக்கப்பட்டால் பொதுமக்கள் ஒன்று கூடி போராட்டம் நடத்துவோம் என்று மனு அளிக்க வந்தவர்கள் தெரிவித்தனர்.