மதுரை: கோதையாற்றில் பேச்சிப்பாறை அணை முதல் திற்பரப்பு அருவி வரை உள்ள மரங்களை வெட்டுவதற்கு தடை கோரி சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் பேச்சிப்பாறையைச் சேர்ந்த டேவிட்தாஸ் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், "பேச்சிப்பாறை அணையிலிருந்து வெளியேறும் உபரிநீர் அரபிக்கடலில் கலக்கிறது.
மரங்கள் வெட்டும் பணி தொடக்கம்
பேச்சிப்பாறை அணையிலிருந்து, கோதையாறு அரபிக்கடலில் கலப்பதற்கு இடையே ஆரல்வாய்மொழி- நெடுமங்காடு பாலம், பேச்சிப்பாறை ஜீரோ பாயிண்ட் பாலம், சக்கரபாணி - அஞ்சுகண்டறை பாலம், ஒரு நடக்க பாலம் என 4 முக்கிய பாடங்கள் உள்ளன.
இந்நிலையில் ஆற்றை அளக்கும் பணி கடந்த ஒரு மாத காலமாக நடைபெற்று வருகிறது. கடலுக்கு நீர் செல்லும் பாதையில் இருக்கும் மரங்கள் தடையாக உள்ளது என தவறான முடிவு எடுக்கப்பட்டு பொதுப்பணித் துறையினரால் மரங்களை வெட்டும் பணி தொடங்கப்பட உள்ளது.
சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு
பேச்சிப்பாறை அணை கட்டப்பட்டு 115 ஆண்டுகள் ஆன நிலையில் தண்ணீர் இயல்பாகவே கடலில் கலந்து வருகிறது. இதுபோல மரங்களை வெட்டி கடலுக்கு தண்ணீரை அனுப்ப வேண்டுமென எவ்விதமான கோரிக்கையும் வைக்கப்படவில்லை.