தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

விமரிசையாக கொண்டாடப்பட்ட ஸ்ரீ புதுமால் சுவாமி திருக்கோவில் தேர்த்திருவிழா! - திருப்பதி ஏழுமலையான் கோயில்

கன்னியாகுமரி: பிரசித்தி பெற்ற ஸ்ரீ புதுமால் சுவாமி திருக்கோவில் தேர்த்திருவிழா பக்தர்களால் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.

perumal-temple-car-festival

By

Published : Oct 9, 2019, 7:08 AM IST

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலை அடுத்த ஶ்ரீ புதுமால் சுவாமி திருக்கோவிலானது மிகவும் பழமைவாய்ந்த கோவிலாகும். இந்த திருக்கோவிலில் புரட்டாசி திருவிழா கடந்த மாதம் 29ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

பத்து நாட்கள் நடைபெறும் இந்தக் கோவில் திருவிழாவின் பத்தாம் நாளில் முக்கிய நிகழ்வாக பிரசித்தி பெற்ற தேரோட்டம் நடைபெற்றது. இதனையடுத்து கோயில் வளாகத்திலிருந்து யானை ஊர்வலத்துடன் புறப்பட்ட தேரானது நகரின் முக்கிய வீதிகள் வழியாக மீண்டும் கோவிலை சென்றடைந்தது.

சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை தேரை வடம்பிடித்து இழுத்துச் சென்றனர். முன்னதாக கேரளா சிங்காரி மேளதாளத்துடன் பக்தர்கள் ஆடிப்பாடி உற்சாகத்துடன் தேரை இழுத்துச் சென்றனர்.

மேலும் ஏராளமான பெண்கள் முத்துக்குடையுடன் வலம் வந்தனர். திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவ தினத்தில் புதுமால் பெருமாள் கோவிலிலும் கொடி ஏற்றப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: ஹரியானா அரசியலில் புதிய திருப்பம் - காங்கிரஸில் இணைந்த முக்கிய எதிர்க்கட்சித் தலைவர்

ABOUT THE AUTHOR

...view details