தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அழகு நிலையம் திறக்க அனுமதி கோரி ஆட்சியரிடம் மனு! - அழகுக்கலை நிபுணர் சங்க முன்னாள் தலைவர் மெரினா ராஜப்பாவின் பேட்டி

கன்னியாகுமரி: பெண்களுக்கான அழகு நிலையங்களை திறக்க அனுமதி கேட்டு, அழகுக்கலை நிபுணர் சங்கம் சார்பில் ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது.

ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்த அழகுக்கலை நிபுணர் சங்கத்தினர்
ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்த அழகுக்கலை நிபுணர் சங்கத்தினர்

By

Published : May 20, 2020, 3:11 PM IST

இது தொடர்பாக அழகுக்கலை நிபுணர் சங்க முன்னாள் தலைவர் மெரினா ராஜப்பா கூறியதாவது: "தமிழ்நாட்டில் கரோனா நோய் பாதிப்பு காரணமாக கடந்த 40 நாட்களுக்கு மேலாக ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்து வருகிறது. இதனால் பலதரப்பட்ட தொழில்கள் முடங்கி பொது மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதேபோல, தமிழ்நாடு முழுவதும் இயங்கிவரும் 45 ஆயிரம் அழகுக்கலை நிலையங்கள் அடைக்கப்பட்டுள்ளன. இதில் பணியாற்றும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பேட்டி: அழகுக்கலை நிபுணர் சங்க முன்னாள் தலைவர் மெரினா ராஜப்பா
இதில், 90 விழுக்காடு அழகுக்கலை நிலையங்கள் வாடகை கட்டடங்களில் இயங்கி வருகின்றன. இதனால் வாடகை கொடுக்க முடியாமல் அழகுக்கலை நிபுணர்கள் அவதி அடைந்துள்ளனர். எனவே, குமரி மாவட்டத்தில் முடிதிருத்தும் மையங்கள் இயங்க அனுமதி அளித்தது போல, அழகுக்கலை நிலையங்களும் இயங்க அனுமதி அளிக்க வேண்டும். அனுமதி அளிக்கும் பட்சத்தில் நாங்கள் அரசின் விதிமுறைகளுக்கு உட்பட்டு தகுந்த இடைவெளி கடைபிடித்து உரிய முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றி தொழில் செய்வோம். மேலும், கடந்த மூன்று மாதங்களாக தொழில் இல்லாமல் பாதிக்கப்பட்டுள்ள அழகுக்கலை நிபுணர்களுக்கு ரூ. 15,000 நிவாரணம் வழங்க வேண்டும்", என்றார்.

ABOUT THE AUTHOR

...view details