கன்னியாகுமரி: கன்னியாகுமரியை அடுத்த ஒற்றையால்விளை அரசு மேல்நிலைப்பள்ளியின் வெளிப்புற சுவரில், பெரியார், அண்ணா ஆகியத் தலைவர்களின் உருவப்படம் ஓவியமாக வரையப்பட்டுள்ளது. இந்நிலையில், பெரியார் படத்தின் மீது அடையாளம் தெரியாத நபர்கள் ஆயில் பெயின்டை ஊற்றி அவமதித்துள்ளனர்.
குமரி அருகே பெரியார் படம் அவமதிப்பு: போலீஸார் விசாரணை - பெரியார் சிலை அவமதிப்பு
கன்னியாகுமரி அருகே அரசுப் பள்ளி சுவரில் வரையப்பட்டிருந்த பெரியார் படத்தின் மீது ஆயில் ஊற்றிய அடையாளம் தெரியாத நபர்களை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.
அவமதிப்பிற்கு உள்ளான பெரியார் ஓவியம்
இதுகுறித்து பள்ளி தலைமை ஆசிரியர் மதிவண்ணன், கன்னியாகுமரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதன்பேரில் வழக்குப்பதிந்த காவல் துறையினர் அடையாளம் தெரியாத நபர்கள் குறித்து விசாரணை நடத்தி அவர்களைத் தேடி வருகின்றனர்.