மக்களை துன்புறுத்தி வந்த மகிசாசுரன் என்ற அரக்கனுடன், ஆதிபராசக்தி ஒன்பது நாட்கள் போரிட்டு 10ஆவது நாளில் அவனை வதம் செய்து வெற்றிகொண்டதை நினைவூட்டும் வகையில் நவராத்திரிவிழா கொண்டாடப்படுவதாக மக்கள் மத்தியில் நம்பிக்கை இருந்து வருகிறது.
இதனை நினைவுகூறும் வகையிலும், மாணவர்களின் பன்முகத்தன்மையை வெளிகாட்டும் வகையிலும், புராண கால கதைகளை மாணவர்களுக்கு எடுத்துரைக்கவும், கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ள தனியார் பள்ளியில் நவராத்திரி விழா கொண்டடப்பட்டது.