கன்னியாகுமரி: மாவட்டதின் பல்வேறு பகுதிகளில் 33 இடங்களில் கரோனா தடுப்பூசி முகாம்கள் அமைக்கப்பட்டு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. குறிப்பாக நாகர்கோவில் மாநகராட்சி பகுதியில் மட்டும் இரண்டு இடங்களில் தடுப்பூசி போடப்படுகிறது.
ஒவ்வொரு முகாமிலும் 200 முதல் 500 தடுப்பூசி வரை போடப்படுகிறது. அதற்காக 1000 முதல் 2000 பேர் வரை வந்து காத்திருந்து டோக்கன் கிடைக்காமல் திரும்பச் செல்கின்றனர். கடந்த ஆறு நாள்களாக இருப்பு இல்லாத காரணத்தால் தடுப்பூசி செலுத்தும் பணி நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
தடுப்பூசி போட வழிநெடுகிலும் கால்கடுக்க காத்திருக்கும் மக்கள் இந்த நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்திற்கு 11 ஆயிரத்து 500 தடுப்பூசி மருந்துகள் வந்து சேர்ந்தது. தடுப்பூசி போடும் ஆர்வம் பொதுமக்கள் மத்தியில் அதிகரித்து வருவதால் அனைத்து முகாம்களிலும் பொதுமக்கள் ஆயிரக்கணக்கில் குவிகின்றனர். அங்கு சமூக இடைவெளியை கடைபிடிப்பதில்லை.
இதனால் ஆன்லைன் மூலம் டோக்கன் புக் செய்து முகாம்களை வரைமுறைபடுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர். இதுவரை மாவட்டத்தில் 1 லட்சத்து 61 ஆயிரத்து 445 பேர் முதல் டோஸ் தடுப்பூசியும் 46 ஆயிரத்து 567 பேர் இரண்டாம் டோஸ் தடுப்பூசியும் எடுத்துக் கொண்டுள்ளனர்.
இதையும் படிங்க: 'பணிச்சுமையில் தூய்மை பணியாளர்கள்' - மனச்சுமையால் பாதிக்கப்படும் அபாயம்