கன்னியாகுமரி: தோவாளை ஒன்றியத்திற்கு உட்பட்ட காட்டுப்புதூர் கிராமத்தில் நூற்றுக்கணக்கான ஆதி திராவிட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இவர்கள் அப்பகுதிக்கு அருகே காற்றாடிவிளை பகுதியிலுள்ள நிலத்தை இடுகாடு மற்றும் சுடுகாடாக கடந்த பல ஆண்டுகளாக பயன்படுத்தி வருகின்றனர்.
இடுகாட்டில் பல கல்லறைகளும் காணப்படும் நிலையில், அவற்றை அகற்றிவிட்டு அரசு அடுக்குமாடி குடியிருப்பு அமைப்பதற்கான முயற்சிகளில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டி உள்ளனர். நீண்ட காலமாக பயன்படுத்தும் தங்கள் இடுகாடு மற்றும் சுடுகாட்டை மற்றொரு பயன்பாட்டிற்கு அனுமதிக்கக் கூடாது என இது குறித்து மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.