தமிழ்நாடு

tamil nadu

By

Published : Nov 20, 2019, 2:44 AM IST

ETV Bharat / state

தேசிய நெடுஞ்சாலையை சீரமைக்கக்கோரி திமுக மறியல்

கன்னியாகுமரி: தடிகாரகோணம் - புத்தேரி வரையிலான தேசிய நெடுஞ்சாலையை சீரமைக்கக்கோரி திமுக தலைமையில் சாலை மறியல் நடைபெற்றது.

சாலையை சீரமைக் கோரி திமுக தலைமையில் நடந்த சாலை மறியல்

கன்னியாகுமரி மாவட்டம் தடிக்காரகோணம் முதல் புத்தேரி வரையிலான பாலமோர் சாலையில் குழாய்கள் பதிப்பத்தற்காக கடந்த இரு வருடங்களுக்கு முன்பு பள்ளங்கள் தோண்டப்பட்டு குழாய்கள் பதிக்கப்பட்டன.

ஆனால், குழாய் பதித்த பின்னர் தோண்டப்பட்ட பள்ளங்களை இதுவரை தேசிய நெடுஞ்சாலை துறை அலுவலர்கள் மூடவில்லை. இதனால், கடந்த இரு வருடத்தில் மட்டும் 15க்கும் மேற்பட்டவர்கள் இப்பகுதியில் சாலையில் விபத்தில் சிக்கி உயிரிழந்தனர். பல பேர் கை, கால்கள் இழந்துள்ளனர்.

எனவே தொடர் விபத்துகளை ஏற்படுத்தும் சாலையை சீரமைக்கக் கோரி பலமுறை மாவட்ட நிர்வாகம், தேசிய நெடுஞ்சாலை துறை அலுவலர்களிடம் புகார் அளித்தும் சாலையை சீர் அமைக்கப்படவில்லை.

சாலையை சீரமைக் கோரி திமுக தலைமையில் நடந்த சாலை மறியல்

இதனால், தேசிய நெடுஞ்சாலை துறையையும் தமிழ்நாடு அரசையும் கண்டித்து கன்னியாகுமரி திமுக சட்டப்பேரவை உறுப்பினர் ஆஸ்டின் தலைமையில், நூற்றுக்கணக்கான திமுகவினரும் அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்களும் இணைந்து திட்டுவிளை சந்திப்பில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

மேலும் தமிழ்நாடு அரசையும் தேசிய நெடுஞ்சாலை துறையை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டன. இந்த சாலை மறியலால் தடிகாரகோணம் - நாகர்கோவில் சாலையில் சுமார் ஒரு மணி நேரம் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர், மறியலில் ஈடுபட்ட பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் பதினைந்து நாட்களுக்குள் பழுதான சாலை சீரமைக்கப்படும் என்று தேசிய நெடுஞ்சாலை துறை அலுவலர்கள் உறுதி அளித்ததையடுத்து சாலை மறியல் கைவிடப்பட்டது.

இதையும் படிங்க : சிறுமி கூட்டு பாலியல் வன்புணர்வு - குற்றவாளிகளைக் கைது செய்யக்கோரி சாலை மறியல்!

ABOUT THE AUTHOR

...view details