கன்னியாகுமரி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரும், காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவருமான ஹெச்.வசந்தகுமார், கரோனா தொற்று காரணமாக உடல்நிலை பாதிக்கப்பட்டு, கடந்த ஆகஸ்ட் மாதம் 28ஆம் தேதி காலமானார். அவரது உடல் சொந்த ஊரான அகஸ்தீஸ்வரத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது. வசந்தகுமார் காலமானதால் தற்போது கன்னியாகுமரி தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்தவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. வசந்தகுமார் இறந்து சில நாட்களே ஆகியிருக்கும் நிலையில், இடைத்தேர்தல் குறித்தோ, போட்டியிடும் வேட்பாளர்கள் குறித்தோ வெளிப்படையாக எந்த கட்சியினரும் பேசவில்லை.
ஆனால், வசந்தகுமாரின் ஆதரவாளர்கள், நடுநிலையாளர்கள் என பலரும், வசந்தகுமார் மறைவால் தடைபட்டுள்ள தொகுதிப் பணிகளை, அவரது மகன் நடிகர் விஜய் வசந்த் தொடர்ந்து செய்ய வேண்டுமென சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், சாமிதோப்பு பாலபிரஜாபதி அடிகளாரும் அதே கருத்தையே வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக நமது ஈடிவி பாரத்திற்கு அவர் அளித்த சிறப்புப் பேட்டியில், ” இங்குள்ள மக்கள் சமூகம் மற்றும் மத நல்லிணக்கங்களில் சமாதானமாக வாழ விரும்புகிறவர்கள். இப்படிப்பட்ட மாவட்டத்தில் மார்சல் நேசமணி, காமராஜர் போன்ற தலைவர்கள் மக்களின் பிரதிநிதிகளாக சென்று மக்களுக்குத் தேவையான சேவைகளை செய்து வந்தனர்.