தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ரேஷன் கடை பணி நேர்முகத் தேர்வில் காற்றில் பறந்த தனிமனித இடைவெளி - நோய்த் தொற்று பரவும் அபாயம் - ரேஷன் கடை பணிக்கு நேர்முகத் தேர்வு

கன்னியாகுமரி: குமரி மாவட்ட ரேஷன் கடைகளில் காலியாக உள்ள ரேஷன் பொருள் விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்கள் தேர்வுக்கு இன்று (டிச. 15) ஆயிரக்கணக்கானோர் குவிந்தனர். அப்போது தகுந்த இடைவெளி கடைபிடிக்காமல் இருந்த நிலையில், கரோனா வைரஸ் தொற்று பரவுவதற்கான அபாயம் ஏற்பட்டுள்ளது.

ration shop worker interview
ரேஷன் கடை பணிக்கான நேர்முகத் தேர்வு

By

Published : Dec 15, 2020, 10:42 PM IST

கன்னியாகுமரி மாவட்டத்தில் கூட்டுறவு சங்க பதிவாளர் கட்டுப்பாட்டில் இயங்கும் கூட்டுறவு நிறுவனங்களில் காலியாக உள்ள ரேஷன் கடை விற்பனையாளர் மற்றும் கட்டுநர் பணிகளுக்கான ஆள் சேர்க்கை தொடர்பாக கடந்த சில நாள்களுக்கு முன்னர் அறிவிப்பு வெளியிடப்பட்டது.

நாகர்கோவில் நகரிலுள்ள டதி மேல்நிலைப்பள்ளியில் தினமும் காலை 500 பேர், மாலை 500 பேர் என மொத்தம் 1000 பேருக்கு இந்த பணிகளுக்கான நேர்முகத் தேர்வு நடைபெறுகிறது.

நேர்முகத் தேர்வுக்கு வேலைக்கு விண்ணப்பித்தவர்கள் அதிக அளவில் வருவதுடன், அவர்களுடன் வந்தவர்கள் என ஆயிரிக்கணக்கானோர் தனிப்பிட்ட இடைவெளியை கடைபிடிக்காமலும், முகக்கவசம் அணியாமலும் ஒரே இடத்தில் குவிந்தனர். இதன் காரணமாக கரோனா வைரஸ் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

மாவட்டத்தில் மொத்தமுள்ள 46 விற்பனையாளர்கள் மற்றும் ஏழு கட்டுநர்கள் காலியிடங்களுக்கான நேர்முகத் தேர்வு இன்று தொடங்கி வரும் 23ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

இதையடுத்து மொத்தமுள்ள 53 காலிப்பணியிடங்களுக்கு 6 ஆயிரம் பேர் விண்ணப்பித்திருந்தனர். இந்தப் பணிக்கு பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி கல்வி தகுதியாக நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. இருப்பினும் ஆயிரக்கணக்கான பட்டதாரிகளும், இந்தப் பணியில் சேருவதற்காக விண்ணப்பித்துள்ளனர்.

இதையும் படிங்க: 'காதுகளில் பூ சுத்தாதே' - விவசாயிகள் நூதன ஆர்ப்பாட்டம்

ABOUT THE AUTHOR

...view details