தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'குமரியில் தனியார் மதுபானக் கடையை மூட வேண்டும்' - மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து மக்கள் மனு! - Close private liquor store in Kumari

கன்னியாகுமரி: தடிக்காரன்கோணம் பகுதியில் மனமகிழ் மன்றம் என்ற பெயரில் புதிதாகத் தொடங்கிய தனியார் மதுபானக் கடையை மூடக் கோரி அப்பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து மனு அளித்தனர்.

தனியார் மது பான கடையை மூட போரட்டம்

By

Published : Nov 15, 2019, 7:22 PM IST

கன்னியாகுமரி மாவட்டம் தடிக்காரன்கோணம் பகுதியில் கோயில்கள், மசூதிகள் நிறைந்து காணப்படுகின்றன. பல பகுதிகளைச் சேர்ந்த பள்ளி கல்லூரி மாணவ, மாணவிகள் இச்சாலை வழியாகவே சென்று வருகிறார்கள்.

இந்நிலையில், தடிக்காரன்கோணம் பெட்ரோல் நிலையம் அருகில் மனமகிழ் மன்றம் என்ற பெயரில் மதுபானக் கடை அமைப்பதற்குத் தனியாருக்குத் தமிழ்நாடு அரசு அனுமதி அளித்தது. இதனால், பொதுமக்களுக்குப் பாதிப்பு ஏற்படும் எனக் கூறி, அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தும், பலப் போராட்டங்களும் நடத்தினார்கள்.
ஆனால், பொதுமக்கள் எதிர்ப்பையும் மீறி அப்பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு, தனியார் மதுபானக் கடை திறக்கப்பட்டுச் செயல்பட்டு வருகிறது.

தனியார் மதுபானக் கடையை மூடப் போராட்டம்

இதனையடுத்து, தனியார் மதுபானக் கடையை உடனடியாக மூட வலியுறுத்தி, அப்பகுதியைச் சேர்ந்த பெண்கள் உட்பட ஏராளமானவர்கள் ஒன்று திரண்டு மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து மனு அளித்தனர்.

இதையும் படிங்க: குற்றங்களைக் குறைக்க "ஹலோ போலீஸ்" தொலைபேசி சேவை அறிமுகம்!

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details