கன்னியாகுமரி மாவட்டம் தோவாளையில் இந்து அறநிலையத் துறைக்கு சொந்தமான பழமை வாய்ந்த கொட்டாரம் பகவதி அம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலுக்கு அருகேயுள்ள தெப்பக்குளத்தில் சாமியை நீராட்டுவதோடு, பக்தர்களும் குளித்து வந்தனர்.
இந்நிலையில் தெப்பக்குளம் தூர்வாரப்படாமல் பாழடைந்ததால், அதனை தூர்வாரக் கோரி பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.