குமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி வடக்கூர் பகுதியில் நியாவிலை கடை ஒன்று அமைந்துள்ளது. இந்த கடையில் சுமார் 1,300 க்கும் மேற்பட்ட குடும்ப அட்டை தாரர்கள் பொருட்களை பெற்று வருகின்றனர். இந்நிலையில் நியாய விலைக்கடை ஊழியர் பல்வேறு காரணங்களை காட்டி, பல நாட்களாக கடையை திறக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்று முன்தினம் (ஜன.29) கடையில் பொருட்கள் வாங்க வந்தவர்கள் கூட்டம் அதிகமாக இருந்தால் பொது மக்களிடம் நாளை (ஜன.30) அரிசி உள்ளிட்ட பொருட்களை பெற்று செல்லலாம் என கடை ஊழியர் கூறியுள்ளார் . அதனை நம்பி நேற்று காலை முதலே கடைக்கு வந்த பொது மக்கள் கடை பூட்டி கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். மதியம் வரை கடை திறக்கப்படவில்லை.