கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட வடிவீஸ்வரம் பகுதியில் ஆக்கிரமிப்பு நிலங்களில் 22 வீடுகள் கட்டப்பட்டுள்ளதாக கூறி அதனை இடிப்பதற்காக மாநகராட்சி அலுவலர்கள் இயந்திரங்களுடன் சென்றுள்ளனர்.
அலுவலர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட மக்கள்:
இதற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், தாங்கள் புறம்போக்கு நிலத்தில் வீடு கட்டவில்லை, பட்டா நிலத்தில் தான் வீடு கட்டியுள்ளோம். அதற்குரிய வரியையும் செலுத்தி வருகிறோம்.
அவ்வாறு இருக்கும்பட்சத்தில் வீடுகளை எப்படி எடுக்கலாம். வீடுகளை இடிக்க வேண்டுமென்றால் எங்களை கொலை செய்துவிட்டு வீடுகளை இடியுங்கள் என அலுவலர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.