கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த ஜூன், ஜூலை மாதங்களில் ஏற்பட்ட தென்மேற்குப் பருவமழை வழக்கத்தை விட 45% அதிகமாக மழை பெய்துள்ளது என வானிலை ஆய்வு மையம் பதிவு செய்துள்ளனர். இதனால் வழக்கத்தைவிட அணைகளின் நீர்மட்டம் உயர்வாகவே இருந்தது. தண்ணீர் வரத்து அதிகரிக்க அதிகரிக்க உபரி நீர் திறந்து விடப்பட்டதால் ஆறுகளுக்கு அடிக்கடி வெள்ள அபாய எச்சரிக்கை விடுவிக்கப்பட்டது.
இந்த நிலையில் இன்றைய நிலவரப்படி 48 அடி கொள்ளளவு கொண்ட பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் 43.55 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 976 கனஅடி நீர் வந்துகொண்டு இருக்கிறது. விநாக்கு 377 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதேபோன்று 77 அடி கொள்ளளவு கொண்ட பெருஞ்சாணி அணைக்கு நீர்மட்டம் 72.87 அடியாக உயர்ந்துள்ளது.
அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 890 அடியும் வெளியேற்றம் விநாடிக்கு 470 கன அடியுமாகவுள்ளது. நேற்று(அக்.26) முன்தினம் பெருஞ்சாணி அணைக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டது. அதனைத்தொடர்ந்து இன்று(அக்.28) பேச்சிப்பாறை அணைக்கும் வெள்ள அபாய எச்சரிக்கை விடுவிக்கப்பட்டுள்ளது.