தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஜெயந்தி ஜனதா விரைவு ரயில்: இனி புனே வரை மட்டுமே... கடுப்பான பயணிகள் - ரயில்வே அறிவிப்பை எதிர்த்த பயணிகள்

கன்னியாகுமரியிலிருந்து மும்பை வரை செல்லும், ஜெயந்தி ஜனதா விரைவு ரயில் இனி புனே வரை மட்டுமே இயக்கப்படும் என ரயில்வே நிர்வாகம் தெரிவித்ததைத் தொடர்ந்து, பயணிகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்துவருகின்றனர்.

passengers disappointment railway announcement about Jayanti Janta Express Jayanti Janta Express passengers disappointment on railway announcement ஜெயந்தி ஜனதா எக்ஸ்பிரஸ் பயணிகள் கடும் எதிர்ப்பு ரயில்வே அறிவிப்பு ஜெயந்தி ஜனதா எக்ஸ்பிரஸ் குறித்து ரயில்வே அறிவிப்பு ரயில்வே அறிவிப்பை எதிர்த்த பயணிகள் கன்னியாகுமரி டூ மும்பை எக்ஸ்பிரஸ்
ஜெயந்தி ஜனதா எக்ஸ்பிரஸ்

By

Published : Feb 5, 2022, 4:34 PM IST

கன்னியாகுமரி: கன்னியாகுமரியிலிருந்து மும்பைக்கு ஜெயந்தி ஜனதா விரைவு ரயில் இயக்கப்பட்டுவந்தது. ஆனால் கரோனா பரவல் காரணமாக, இந்த ரயிலின் இயக்கம் நிறுத்திவைக்கப்பட்டிருந்தது.

தற்போது கரோனா பரவல் குறைந்துவருவதினால், இந்த ரயிலின் சேவை மீண்டும் தொடங்கவுள்ளதாகக் கூறப்பட்டது. அதாவது ஏப்ரல் மாதம் முதல் இந்த ரயிலின் இயக்கம் மீண்டும் தொடங்கப்படும் என ரயில்வே நிர்வாகம் தெரிவித்திருந்தது.

மேலும் முன்பு மும்பை வரை இயங்கிய ரயில், இனி புனே வரை மட்டுமே இயங்கும் எனவும் அறிவிப்பு வெளியிட்டிருந்தது. இதனை அறிந்த மக்கள், கடும் எதிர்ப்புத் தெரிவித்துவருகின்றனர்.

இதையும் படிங்க: பப்ஜி மதனுக்கு சிறையில் சொகுசு வசதி பேரம்: உதவி ஜெயிலர் பணியிடை நீக்கம்

ABOUT THE AUTHOR

...view details