தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சினிமா ஹீரோ போல விளம்பரம்: கன்னியாகுமரி பாஜக vs காங்கிரஸ்! - விஜய் வசந்த்

விளம்பரங்களை எடுப்பதற்காக கேமராமேன், போட்டோகிராஃபர், எடிட்டிங் வேலைகளுக்காக இளைஞர் பட்டாளம் வைத்து நாள்தோறும் புதிய புதிய வீடியோ பதிவுகளை வெளியிட்டு தேர்தல் களத்தையும், தொண்டர்களையும் உற்சாகப்படுத்தினர்.

சினிமா ஹீரோ போல விளம்பரம்
சினிமா ஹீரோ போல விளம்பரம்

By

Published : Apr 4, 2021, 4:55 PM IST

Updated : Apr 4, 2021, 5:52 PM IST

கன்னியாகுமரி: தேர்தல் களம் இறுதிகட்டத்தை எட்டியுள்ள நிலையில் வேட்பாளர்கள் தங்களை சினிமா ஹீரோ போல் சித்தரித்து வெளியிட்ட ஹைடெக் பரப்புரைகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தமிழ்நாடு சட்டப்பேரவை, கன்னியாகுமரி மக்களவை இடைத்தேர்தல் ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெறவுள்ளது. இரண்டு தேர்தல் ஒரே நேரத்தில் நடைபெறவிருப்பதால், குமரி தேர்தல் களம் சூடு பிடிக்கத் தொடங்கியது. பிரதமர் முதல் முதலமைச்சர் வரை முக்கிய தலைவர்கள், சினிமா நட்சத்திரங்கள் என வாக்கு சேகரிக்கும் பணியால் தேர்தல் களம் அனல் பறக்கிறது.

அதே நேரத்தில் முக்கிய தலைவர்களுக்கு இணையாக தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களும் தங்களது பரப்புரையை ஹைடெக்காக மாற்றியுள்ளனர். குறிப்பாக, குமரி மக்களவை தொகுதி இடைத்தேர்தல் வேட்பாளர்கள் பொன்ராதாகிருஷ்ணனும், விஜய் வசந்தும் விளம்பர யுக்தியில் உச்சத்தை தொட்டுள்ளனர்.

சினிமா ஹீரோ போல விளம்பரம்: கன்னியாகுமரி பாஜக vs காங்கிரஸ்!
அதன்படி, வேட்பாளர் காரில் இறங்கி ஸ்லோ மோஷனில் சினிமா கதாநாயகன் போல நடந்து வந்து வாக்கு சேகரிப்பது. மேலும், தொண்டர்கள் புடைசூழ செல்வது போன்ற காட்சிகளை வீடியோ எடுத்து அதன் பின்னணியில் சினிமா பாடல்களை சேர்த்து அதை கச்சிதமாக எடிட் பண்ணி உடனடியாக சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்து வைரலாக்கினர்.இதுபோன்ற விளம்பரங்களை எடுப்பதற்காக கேமராமேன், போட்டோகிராஃபர், எடிட்டிங் வேலைகளுக்காக இளைஞர் பட்டாளம் வைத்து நாள்தோறும் புதிய புதிய வீடியோ பதிவுகளை வெளியிட்டு தேர்தல் களத்தையும், தொண்டர்களையும் உற்சாகப்படுத்தினர்.வேட்பாளர்களின் இந்த புதிய யுக்தி வாக்காளர்கள் மத்தியில் ஒரு சினிமா ஹீரோ அளவில் வேட்பாளர்களை கொண்டு செல்கிறது. பழைய காலங்கள் போலில்லாமல் இதுபோன்ற நவீன பிரச்சார யுக்திகளால் களைகட்டியிருந்த தேர்தல் பரப்புரை இன்றோடு நிறைவடைகிறது.
Last Updated : Apr 4, 2021, 5:52 PM IST

ABOUT THE AUTHOR

...view details