கன்னியாகுமரிபகவதி அம்மன் கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் நவராத்திரி விழாவின் இறுதி நிகழ்வான பரிவேட்டை திருவிழா, பத்து நாட்கள் கோலாகலமாக கொண்டாடப்படுவது வழக்கம். அந்த வகையில் கடந்த செப்டம்பர் 26 ஆம் தேதி நவராத்திரி தொடங்கியபோது, கோயிலின் அலங்கார மண்டபத்தில் பொம்மைகள் வைத்து 10 நாட்களும் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வந்தது.
இதனையடுத்து சிகர நிகழ்ச்சியான பரிவேட்டை திருவிழா நேற்று (அக் 5) நடைபெற்றது. இதனையொட்டி, பகவதி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் கோயிலின் வெளி பிரகாரம் உள்ள அலங்கார மண்டபத்தில், எலுமிச்சம்பழம் மாலைகளால் அலங்கரிக்கப்பட்டு வெள்ளி குதிரை வாகனத்தில் எழுந்தருளிய அம்மன் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.