குமரி மாவட்டத்தில் திருவட்டார் ஊராட்சி ஒன்றியத்திற்குள்பட்டு 10 கிராம ஊராட்சிகள் உள்ளன. இந்த ஊராட்சிகளில் தேசிய மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் பணிகளை திருவட்டார் ஊராட்சியின் வட்டார வளர்ச்சி அலுவலர் நேரடியாகத் தலையிட்டு ஒதுக்குவதாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக அலுவலரிடம் பலமுறை கோரிக்கைகள் வைத்தும் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மேலும் இது தொடர்பான பேச்சுவார்த்தை நடந்தபோது வட்டார வளர்ச்சி அலுவலர் வரவில்லை.
வட்டார வளர்ச்சி அலுவலரைக் கண்டித்து 8 ஊராட்சி தலைவர்கள் போராட்டம் இந்நிலையில் திருவட்டார் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வட்டார வளர்ச்சி அலுவலரின் அறைமுன் செறுகோல், காட்டாத்துறை, கண்ணனூர், ஏற்றக்கோடு, குமரன்குடி, சுருளோடு, பேச்சிப்பாறை, அருவிக்கரை, உள்ளிட்ட எட்டு கிராம ஊராட்சி மன்றத் தலைவர்கள் திருவட்டார் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வட்டார வளர்ச்சி அலுவலரைக் கண்டித்து உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையும் படிங்க:வைரல் வீடியோ: வயலில் களைப்பை போக்க நடனமாடிய விவசாயிகள்!