கன்னியாகுமரி அருகே உள்ள வடக்கு குண்டல் பகுதியை சேர்ந்தவர் ராஜசெல்வி(44). இவர் கோவளம் ஊராட்சி மன்ற ஒன்றாவது வார்டு உறுப்பினராக இருந்துவரும் இவர் வட்டார வளர்ச்சி அலுவலருக்கு புகார் மனு ஒன்றை அனுப்பியுள்ளார்.
அந்த மனுவில், “கன்னியாகுமரி மாவட்டம் கோவளம் ஊராட்சிக்கு உட்பட்ட வடக்கு குண்டல் கிராமத்தில் ஒன்றாவது வார்டில் ஊராட்சிக்கு சொந்தமான இடத்தில் தாணுலிங்க நாடார் பெயரில் ஒரு பொது நூலகமும், ஊராட்சியால் வழங்கப்பட்ட தொலைக்காட்சி அறையும் அந்த அறையில் தொலைக்காட்சி பெட்டி மற்றும் அது சம்பந்தமான பொருட்களும் இருந்தன. மேலும் சிறுவர் பூங்கா, சிறுவர்கள் விளையாடும் ராட்டினம், ஊஞ்சல் பலகை உள்ளிட்ட விலை மதிப்புமிக்க விளையாட்டுப் பொருட்கள் இருந்தன.