தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

இருபது நாள்கள் கடந்தும் கருக்காத குருத்தோலை! - palm sunday miracle in vedha manikapuram csi church

கன்னியாகுமரி: அழகப்பபுரம் பேரூராட்சிக்கு உட்பட்ட வேத மாணிக்கபுரம் சிஎஸ்ஐ தேவாலயத்தில் குருத்தோலை தினத்தை முன்னிட்டு கடந்த 5ஆம் தேதியன்று கட்டப்பட்ட தென்னங்குருத்தோலை ஒன்று, 20 நாட்கள் கடந்தும் கருகாமல் பச்சையாக உள்ள அதிசயம், அப்பகுதி மக்களிடையே காட்டுத் தீ போல் பரவி வருகிறது.

palm leaf fresh after twenty days in kanyakumari church
palm leaf fresh after twenty days in kanyakumari church

By

Published : Apr 24, 2020, 5:58 PM IST

கன்னியாகுமரியில் கடந்த 5ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை குருத்தோலை தினம், கிறிஸ்தவர்களால் கொண்டாடப்பட்டது. ஆனால் 144 தடை உத்தரவு அமலில் இருந்ததால் பங்குத்தந்தை, அருட்தந்தை மட்டுமே திருப்பலியில் கலந்துகொண்டு குருத்தோலை தினத்தைக் கொண்டாடினர்.

இந்நிலையில் அழகப்பபுரம் பேரூராட்சிக்கு உட்பட்ட புன்னார்குளத்தை அடுத்த வேத மாணிக்கபுரம் சிஎஸ்ஐ தேவாலயத்தில் பாதிரியார் ஆல்பர்ட் வீரபால் தலைமையில், கடந்த 5ஆம் தேதி குருத்தோலை தினம் கொண்டாடப்பட்டது. இதை முன்னிட்டு, ஆலயத்தைச் சுற்றி தென்னை குருத்தோலைகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.

இதைத்தொடர்ந்து ஒரு வாரம் கழித்து ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்பட்டது. அப்போது ஆலய வளாகத்தைச் சுற்றி, கட்டப்பட்டிருந்த குருத்தோலைகள் காய்ந்து விட்டன. ஆனால், குருத்தோலை கட்டி இன்றுடன் 20 நாட்கள் கடந்த பிறகும், ஒரே ஒரு குருத்தோலை மட்டும் காயாமல் பச்சையாகவே காணப்படுகிறது. குருத்தோலை காயாமல் பச்சையாக இருக்கும் தகவல் அப்பகுதி பொதுமக்களிடையே காட்டுத்தீ போல் பரவி வருகிறது.

கருக்காத குருத்தோலை

இதையும் படிங்க... குருத்தோலை ஞாயிறு:வெறிச்சோடி காணப்பட்ட தேவாலயங்கள்

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details