கன்னியாகுமரியில் பிரபலமான கோயிலான பகவதியம்மன் கோயிலின் வைகாசி விசாக பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் இன்று கோலாகலமாக தொடங்கியது. திருக்கொடியை மணலிகரை மடம் நம்பூதிரி சஜித் சங்கரநாராயணரூ ஏற்றிவைத்தார்.
பகவதியம்மன் கோயில் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்! - கொடியேற்றத்துடன் இன்று தொடங்கியது!
நாகர்கோவில்: தமிழ்நாட்டின் பிரபலமான கோயில்களில் ஒன்றான பகவதியம்மன் கோயிலின் வைகாசி விசாக பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் இன்று தொடங்கியது.

பகவதியம்மன் கோயில்
முன்னதாக நேற்று இரவு மத நல்லிணக்கத்தின் அடையாளமாக ஆண்டாண்டு கால பாரம்பரியப்படி கொடி மர கயிற்றை கன்னியாகுமரி வாவுத்துறையைச் சேர்ந்த கிறிஸ்தவ மீனவர்கள் கோயிலில் கொண்டு வந்து கோயில் நிர்வாகிகளிடம் ஒப்படைத்தனர்.
கொடியேற்றத்தைத் தொடர்ந்து சிறப்பு அபிஷேகம், அன்னதானம், சமயவுரை, பக்தி இன்னிசை கச்சேரி, அம்மன் வீதி உலா வரும் நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.இதற்கான ஏற்பாடுகளை கன்னியாகுமரி மாவட்ட இந்து சமய அறநிலையத்துறை நிர்வாகிகள், பகவதி அம்மன் கோயில் பக்தர்கள் சங்கம் செய்து வருகின்றனர்.