தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தனியார் ஆலைகளில் இருந்து சாயக்கழிவுகள் வெளியேற்றம்: ஆட்சியரிடம் மனு! - கன்னியாகுமரி

கன்னியாகுமரி: காரவிளை கிராமத்திலும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் அமைந்துள்ள தனியார் ஆலைகளில் இருந்து வெளியேறும் சாயக்கழிவுகளால் பாதிப்பு ஏற்படுவதாகக் கூறி அப்பகுதியினர் ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.

petition

By

Published : Aug 14, 2019, 7:57 AM IST

இது தொடர்பாக காரவிளை பொதுமக்கள் சார்பில் நாகர்கோவில் மாவட்ட ஆட்சியரிடம் அளிக்கப்பட்ட மனுவில் கூறியிருப்பதாவது, "கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலை அடுத்த காரவிளை, அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ஏராளமான கழிவுநீர் ஆலைகள் அமைந்துள்ளன. இந்த தனியார் ஆலைகளில் உள்ள கழிவுநீரை நிலத்தில் கிணறுகள் தோண்டி அதனுள் செலுத்துகிறார்கள்.

இந்தக் கழிவானது நிலத்தடி நீருடன் கலப்பதால் விவசாய நிலங்கள் பாதிப்படைவது மட்டுமல்லாமல் குடிநீர் அதிக அளவில் மாசுபடுகிறது. இந்த ஆலைகள் ஒன்றுக்கும் மேற்பட்ட ஆழ்துளை கிணறுகள் அமைத்து அதிகப்படியான நீரை உறிஞ்சுவதால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து வருகிறது.

தனியார் ஆலைகளில் இருந்து சாயக்கழிவுகள் வெளியேற்றம்

மேலும், காரவிளை பகுதியில் நன்செய் நிலமாக இருந்த விவசாய நிலத்தை ஆலைகள் அமைப்பதாகக் கூறி கட்டடங்கள் கட்டி உள்ளனர். இதனால் விவசாய நிலம், குடிநீர் ஆதாரம் ஆகியவை பாதிக்கப்படுகின்றன. ஆகவே, அதனை உடனடியாக மூடவேண்டும்" என்று கூறப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details