கன்னியாகுமரி: கேரளா மாநிலம் திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோயிலில் நடைபெறவுள்ள நவராத்திரி விழாவில் பங்கேற்க கன்னியாகுமரி மாவட்டம் பத்மநாபபுரம் அரண்மனையில் இருந்து சரஸ்வதி அம்மன் உள்ளிட்ட சுவாமி விக்ரகங்கள், நெற்றி பட்டம் சூட்டிய யானைகளுடன் அரண்மனை வளாகத்தில் இருந்து மன்னர் பயன்படுத்திய உடைவாள் முன் செல்ல, தமிழ்நாடு - கேரளா காவல்துறையினரின் அணிவகுப்பு மற்றும் பாதுகாப்புடன் அரண்மனையில் இருந்து மன்னர்கள் கால பாரம்பரிய முறைப்படி ஊர்வலமாக புறப்பட்டுச் சென்றது.
முன்னதாக மன்னரின் உடைவாளை கேரள அரசு தமிழ்நாடு அரசிடம் ஒப்படைக்கும் உடைவாள் கைமாற்றம் நிகழ்ச்சியில், தமிழ்நாடு இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, கேரளா தேவசம்போராட்டு அமைச்சர் ராதாகிருஷ்ணன், தேவசன்போர்டு தலைவர் அனந்தகோபன் ஆகியோர் கலந்து கொண்டனர்.