கன்னியாகுமரி மாவட்டம் பத்மநாபபுரம் பகுதியில் திருவிதாங்கூர் மன்னர் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்ட அரண்மனை உள்ளது. இந்த அரண்மனை முழுவதும் கேரள அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது.
கரோனா தொற்று அச்சம் காரணமாக கடந்த ஏழு மாதங்களாக இந்த அரண்மனை பூட்டப்பட்டிருந்தது. இதனையடுத்து இன்று (நவ.3) முதல் பொதுமக்களுக்கும் சுற்றுலா பயணிகளுக்கும் பார்வையிட அனுமதித்து கேரள அரசு உத்தரவிட்டுள்ளது.
இதனையடுத்து மாவட்ட நிர்வாகமும் பத்மநாபபுரம் அரண்மனையை சுற்றுலா பயணிகள் பார்வைக்காக திறக்க அனுமதி வழங்கியது.
பத்மநாபபுரம் அரண்மனை திறப்பு இங்கு உள்ள அனைத்து ஊழியர்களும் முகக்கவசம், கையுறை அணிந்து பணி செய்ய தொடங்கி உள்ளனர். இங்கு வரும் சுற்றுலா பயணிகளை முகக்கவசம், கையுறை அணிந்து வரவேண்டும். அரண்மனைக்கு வருபவர்கள் காய்ச்சல் பரிசோதனை செய்த பிறகே அனுமதிக்கபடுவர்.
பத்துபேர் மட்டுமே அரண்மனையை பார்வையிட அனுமதிக்கப்படுவர். அவர்கள் பார்வையிட்டு வந்த பிறகு அடுத்த பத்து பேரை அரண்மனையை பார்வையிட உள்ளே அனுமதிக்கப்படுவர் உள்ளிட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுளளது.