தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பருவமழை பொய்த்தது... அதிர்ச்சியில் விவசாயிகள்! - பருவமழை பொய்த்தது

கன்னியாகுமரி: தென்மேற்கு பருவமழையை நம்பி நெல் சாகுபடி செய்த விவசாயிகள், பருவ மழை பொய்த்ததால் அதிர்ச்சியில் உள்ளனர். இன்னும் ஓரிரு நாட்களில் மழை பெய்யாவிட்டால் நெற்பயிர்கள் அனைத்தும் வீணாகும் நிலையில் உள்ளன.

கன்னியாகுமரி

By

Published : Jun 21, 2019, 5:22 PM IST

நீர்நிலைகள் அதிகம் உள்ள மாவட்டங்களில் கன்னியாகுமரியும் ஒன்றாகத் திகழ்கிறது. இங்கு கன்னி பூ, கும்ப பூ என இருபோக சாகுபடிகள் உள்ளன. சாகுபடி நேரத்தில் போதிய தண்ணீர் இல்லாததாலும், அறுவடை நேரத்தில் கன மழை போன்ற காரணங்களாலும் நெல் விவசாயம் ஆண்டுதோறும் குறைந்து வருகிறது.

இந்தாண்டு பருவ மழை கைகொடுக்கும் என்ற நம்பிக்கையில் மே மாதம் முடிவதற்குள் நடவுப் பணிகளை விவசாயிகள் முடித்துவிட்டனர். ஆனால் தற்போது பருவமழை பொய்த்து விவசாயிகளுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளது.

கடந்த ஆண்டு கோடை சீசன் முடியும் தருவாயில் ஓரளவுமழை பெய்தது. ஆனால் தற்போது மலையோரப் பகுதிகளில் சாரல் மழை பொழிந்தாலும் விவசாயத்திற்கு ஏற்ற வகையில் போதுமானதாக இல்லை. அணைகளில் பாசனத்திற்கு பயன்படுத்தும் வகையில் தண்ணீர் இல்லை.

பருவமழை பொய்த்தது... அதிர்ச்சியில் விவசாயிகள்

மாவட்டம் முழுவதும் உள்ள 2,040 குளங்களில் மூன்றில் ஒரு பங்கு குளங்களில் மட்டுமே குறைந்த அளவில் தண்ணீர் உள்ளது. இவற்றை பயன்படுத்தி குளங்களின் கீழ் பகுதியில் உள்ள வயல்களில் மட்டும் நடவு பணி நடந்து வருகிறது. மாவட்டத்தில் சாகுபடிக்கு போதிய தண்ணீர் இல்லாதபோதும் தென்மேற்கு பருவமழை கைகொடுக்கும் என்ற நம்பிக்கையில் ஒரு சில இடங்களில் விவசாயிகள் நெல் நடவுப் பணிகளை மேற்கொண்டனர்.

ஆனால், இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழையும் ஒரு வாரத்திற்கு மேல் பெய்யவில்லை. இதனால் பருவமழையை நம்பி நெல் சாகுபடி செய்த விவசாயிகள் ஏமாற்றத்தில் உள்ளனர். நடவு செய்யப்பட்ட வயல்கள் தண்ணீர் இல்லாமல் காய்ந்து வெடிக்க ஆரம்பித்துள்ளன. இன்னும் ஒரு சில நாட்களில் மழை பெய்யாவிட்டால் நடவு செய்யப்பட்ட பயிர்கள் தண்ணீரின்றி கருகும் நிலையில் உள்ளதால் விவசாயிகள் அதிர்ச்சியில் உறைந்திருக்கின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details