தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நிரம்பி வழிந்த முக்கடல் அணை: மதகுகளைச் சீர் செய்ய பொதுமக்கள் கோரிக்கை! - நிரம்பி வழிந்த முக்கடல் அணை

கன்னியாகுமரி: நாகர்கோவில் நகருக்கு குடிநீர் வழங்கி வரும் 15 அடி கொள்ளளவு கொண்ட முக்கடல் அணை இரண்டாவது முறையாக முழுவதும் நிரம்பியது.

நிரம்பி வழிந்த முக்கடல் அணை: மதகுகளை சீர் செய்ய பொதுமக்கள் கோரிக்கை!

By

Published : Nov 1, 2019, 9:50 PM IST

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மிக கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக திட்டுவிளை, தடிக்காரகோணம், பூதப்பாண்டி, மைலாடி, கொட்டாரம், இறச்சகுளம், உள்ளிட்ட பகுதிகளில் மிக கனமழையைத் தொடர்ந்து பெய்து வருகிறது.

இதனால் நாகர்கோவில் நகருக்கு குடிநீர் வழங்கி வரும் திட்டுவிளை பகுதியில் அமைந்துள்ள முக்கடல் அணை தனது முழு கொள்ளளவான 15 அடியை தாண்டியது . இதனால் அணையில் இருந்து வினாடிக்கு 30 கனஅடி உபரி நீர் அணை மதகுகள் வழியாக வெளியேற்றப்பட்டு வருகிறது. தடுப்பணைகள் கட்டாததால் அணையில் இருந்து வெளியேறும் உபரி நீர் வீணாக கடலில் சென்று கலந்து வருகிறது.

நிரம்பி வழிந்த முக்கடல் அணை: மதகுகளை சீர் செய்ய பொதுமக்கள் கோரிக்கை!

மேலும் பொதுப்பணித்துறை அலுவலர்களின் அலட்சியத்தால் அணையின் மதகுகள் முறையான பராமரிப்பு இல்லாமலும், பக்க சுவர்கள் விரிசல் விழுந்தும் விழும் அபாய நிலையில் உள்ளது. அதனால் அணை மதகுகளை சீர் செய்ய மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

தற்போழுது முக்கடல் அணையிலிருந்து வெளியேற்றப்படும் வெள்ள நீரால், அணைக்கு செல்லும் முதல் வாயில் சாலை முற்றிலுமாக துண்டிக்கப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details