தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கன்னியாகுமரியில் தளர்வில்லா ஊரடங்கை  கடைப்பிடிக்க உத்தரவு! - தளர்வு இல்லாத ஊரடங்கு உத்தரவு

கன்னியாகுமரி: கடற்கரை பகுதிகளில் கரோனா பரவல் அதிகரித்து வருவதால் பங்கு பேரவை சார்பில், நாளை (ஆகஸ்ட் 6) முதல் தளர்வில்லா ஊரடங்கை கடைப்பிடிக்க மக்களுக்கு உத்தரவிட்டுள்ளது.

ஊரடங்கு

By

Published : Aug 5, 2020, 6:39 PM IST

கரோனா வைரஸின் பாதிப்பு, தமிழ்நாட்டில் வேகமாக பரவி வருகின்றது. இதன் காரணமாக, தமிழ்நாடு முழுவதும் சில தளர்வுகளுடன் ஊரடங்கு அமலில் உள்ளது. இதன் பாதிப்பு கன்னியாகுமரி மாவட்ட கடற்கரை கிராமங்களில் அதிகரித்து வந்ததால், சின்னமுட்டம், கன்னியாகுமரி, வாவதுறை, கோவளம், மணக்குடி உள்ளிட்ட கடற்கரை கிராமங்களில் மீனவர்கள் மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கன்னியாகுமரி பேரூராட்சிக்கு உட்பட்ட சில பகுதிகளில் கரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்தும் விதமாக, கன்னியாகுமரி தூய அலங்கார உபகார மாதா திருத்தல பங்கிற்கு உட்பட்ட பகுதிகளில் நாளை (ஆகஸ்ட் 6) மாலை 5 மணி முதல் மறு உத்தரவு வரும் வரை முழு கட்டுப்பாட்டுடன் ஊரடங்கை கடைப்பிடிக்க பங்கு மக்களுக்கு ஊர் நிர்வாகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

மேலும் மிகவும் அத்தியாவசிய தேவைகளான மருத்துவம் உள்ளிட்டவற்றை தவிர்த்து, வேறு எதற்காகவும் ஊர் மக்கள் வெளியே வரவேண்டாம் எனவும் வீட்டுக்குத் தேவையான வீட்டு உபயோகப் பொருட்கள், மளிகை பொருட்கள், காய்கறி ஆகியவற்றை வாங்கி வைத்துக் கொள்ளுமாறும், அனைவரும் அவரவர் வீட்டு பகுதிகளில் வர இருக்க வேண்டி வாகனத்தின் மூலம் கரோனா பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் எனவும், ஊர் சார்பில் ஒலிபெருக்கி மூலம் தற்போது அறிவிக்கப்பட்டு வருகிறது.

ABOUT THE AUTHOR

...view details