கேரள மக்களின் பிரதான பண்டிகையான திருவோணம் திருவிழா குமரி மாவட்டத்தில் பலவேறு பகுதிகளில் கோலாகலமாக தொடங்கியது. ஒரு காலத்தில் கேரளாவுடன் இணைந்திருந்த குமரி மாவட்டம் இன்றும் தனது பங்களிப்பை ஓணம் பண்டிகை கொண்டாட்டத்தில் காட்டியுள்ளது . இதைத் தொடர்ந்து பல்வேறு இடங்களில் அத்திப்பூ கோலமிட்டு ஊஞ்சலாடி மக்கள் கொண்டாட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.
அத்திப்பூ கோலமிட்டு ஓணம் கொண்டாட்டம்! - அத்திப்பூ கோலமிட்டு ஓணம் கொண்டாட்டம்
கன்னியாகுமரி : கேரள மக்களின் பிரதான பண்டிகையான திருவோணம் திருவிழா குழித்துறை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கொண்டாடப்பட்டு வருகிறது.
அத்திப்பூவில் விநாயகர் கோலமிட்டு ஓணம் பண்டிகை கொண்டாட்டம்
அதேபோல குழித்துறையிலும் அத்திப்பூ கோலமிட்டு , ஊஞ்சல் ஆடி கேரள பட்டு எனப்படும் வெள்ளை, மஞ்சள் நிற ஆடையுடுத்தி ஓணம் பண்டிகையை மக்கள் கொண்டாட துவங்கியுள்ளனர். இன்றிலிருந்து பத்து நாட்கள் தொடர்ந்து இந்த நிகழ்வு நடைபெற்று, பத்தாம் நாளான திருவோணத் திருவிழாவன்று நிறைவுபெறும்.
TAGGED:
Onam festival celebration