தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

குமரியில் ஆன்லைன் மூலம் இலவச வேலைவாய்ப்பு பயிற்சி நடத்தும் அமெரிக்க நிறுவனம் - குமரியில் ஆன்லைன் மூலம் இலவச வேலைவாய்ப்பு பயிற்சி

கன்னியாகுமரி: அமெரிக்க நிறுவனம் ஆன்லைனில் இலவச வேலைவாய்ப்பு பயிற்சி முகாம் நடத்துவதாக மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் வடநேரே தகவல் வெளியிட்டுள்ளார்.

ol
col

By

Published : Oct 22, 2020, 6:48 AM IST

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் வடநேரே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "அமெரிக்காவில் கலிபோர்னியாவை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டுவரும் கோர்ஸரா நிறுவனம் 80 நாடுகளில் திறன்களை வளர்க்கும் இலவச பயிற்சி வகுப்புகளை இணையதளம் வழியாக நடத்திவருகிறது. பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள், கூகுள், ஐபிஎம் மற்றும் அரசு நிறுவனங்களுடன் இணைந்து பொறியியல், எந்திர கணிதம், கணினி அறிவியல், டிஜிட்டல் சந்தைபடுத்துதல், உயிரியல், சமூக அறிவியல் மற்றும் பிற பாடங்களில் ஆன்லைன் வழி வகுப்புகளை நடத்தி சான்றிதழ் மற்றும் பட்டப்படிப்புகளை வழங்குகிறது.

உலகின் முன்னணி பல்கலைக்கழகங்கள் மற்றும் தொழில் நிறுவனங்களில் உள்ள பாட குறிப்புகள் மற்றும் காணொலி பாடத்தொகுப்புகளுடன் வகுப்புகள் நடக்கிறது. பயிற்சி முடிந்தவுடன் இணையதளம் வழியாக வேலைவாய்ப்பு முகாம் நடத்தி வேலைவாய்ப்பு அளிக்கப்படுகிறது. இந்த நிறுவனத்துடன் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் இணைந்து தமிழ்நாட்டில் வேலைவாய்ப்பற்ற 50 ஆயிரம் பேருக்கு ஆன்லைன் மூலம் 11 பிரிவுகளில் 4000-க்கும் மேற்பட்ட படங்களில் இலவச குறுகிய கால பயிற்சி அளித்திட ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இந்த பயிற்சியை பெற தமிழ்நாட்டைச் சார்ந்தவராகவும், 18 வயது பூர்த்தியானவர்களாகவும், வேலைவாய்ப்பற்றவராக இருக்க வேண்டும். இந்த பயிற்சியை பெற ஆதார் எண், மின்னஞ்சல், முகவரி மற்றும் செல்போன் எண் ஆகிய விவரங்களுடன் வருகிற 31ஆம் தேதிக்குள் tnskill.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

ABOUT THE AUTHOR

...view details