கன்னியாகுமரி:மீன்பிடி தடைக்காலம் நேற்றுடன் முடிவடைந்த நிலையில், சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து 300-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் மீன்பிடிக்கச் சென்றனர்.
தமிழ்நாட்டின் கிழக்குக் கடற்கரை ஆழ்கடல் பகுதிகளில் கடந்த ஏப்.15ஆம் தேதி முதல் 61 நாட்கள் மீன்களின் இனப்பெருக்க காலம் என வரையறுக்கப்பட்டு விசைப்படகுகள் உள்ளிட்ட படகுகளுக்கு மீன்பிடிக்க தடைக்காலம் விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் மீன்பிடி தடைக்காலம் நேற்றுடன் முடிவடைந்த நிலையில், இன்று (ஜூன்15) சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து 300-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மீனவர்கள் மீன்பிடிக்கச் சென்றனர்.
இதனால், 2 மாதங்களுக்கு பிறகு சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்தைச் சேர்ந்த மீனவர்கள் மீண்டும் மீன்பிடிக்க மகிழ்சியுடன் மீன்பிடிக்க சென்றனர். முன்னதாக அருட்பணியாளர்கள் திருப்பலி நிறைவேற்றி கடல் அன்னைக்கும் படகுகளுக்கும் புனிதநீர் தெளித்து சிறப்பு பிரார்த்தனைகள் செய்து அனுப்பி வைத்தார்.
2 மாதத்திற்கு பின், மீன்பிடிக்க செல்வதால் அதிகளவு மீன்கள் கிடைக்கும் என சின்னமுட்டம் மீனவர்கள் நம்பிக்கை தெரிவித்தனர். அத்தோடு உயர்தர மீன்கள் அதிகளவில் கிடைக்கும். எனவே, அரபிக் கடல் பகுதிகளில் இன்னும் மீன்பிடி தடைகாலம் தொடர்வதால் கேரளாவில் இருந்து ஏராளமானோர் மீன் வாங்க இங்கு வருவார்கள் என்று அப்பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
மீன்பிடி தடைக்காலம் முடிந்ததைத் தொடர்ந்து மீண்டும் மீன் பிடிக்க சென்ற மீனவர்கள் இதையும் படிங்க:
செந்துறை அருகே மந்தையம்மன் கோயிலில் மாடு மாலை தாண்டும் வினோத நிகழ்ச்சி