கன்னியாகுமரி:குமரி மாவட்டம் நாகர்கோவில் எடுத்த கலுங்கடி பகுதியைச் சேர்ந்தவர் வேலம்மாள் (85). இவருக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர். மகளுக்கு திருமணமாகி வெளியூரில் உள்ளார். மகன் உள்ளூரில் கூலி வேலை பார்த்து வரும் சூழலில், வேலம்மாள் தனியாக வீட்டு திண்ணையில் வசித்துவருகிறார்.
இந்நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வழங்கிய கரோனா நிவாரண நிதி ரூ. 2,000 இன்று பெற்ற அவர், ரூபாய் நோட்டை கையில் பிடித்தபடி அவர் சிரித்த முகத்துடன் இருந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலானது.