கரோனா வைரஸ் தொற்றுப் பரவல் தடுப்பு நடவடிக்கையாக, நாடு முழுவதும் மே 3 ஆம் தேதி வரை ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் வீட்டிலேயே இருக்கும் பலரும், பிரபலங்களும், சமூக வலைதளங்கள் மூலமாக பல்வேறு சுவாரஸ்ய, விழிப்புணர்வு சார்ந்த பல்வேறு செயல்களை செய்துவருகின்றனர்.
எம்ஜிஆர் - சிவாஜி படப்பாடல் மெட்டில் கரோனா விழிப்புணர்வு பாடல்: கல்லூரி பேராசிரியர் அசத்தல்!
கன்னியாகுமரி: எம்ஜிஆர், சிவாஜி படப்பாடல் மெட்டில் கல்லூரி பேராசிரியர் இசையுடன் பாடும் கரோனா வைரஸ் தொற்றுப் பற்றிய விழிப்புணர்வு பாடல், தற்போது வலைதளங்களில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
அதில், கரோனா வைரஸ் தொற்றுத் தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்துவது முக்கிய இடம் வகித்துவருகின்றது. குறிப்பாக, பாடல்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்துவது, சமூக வலைதளங்களில் தற்போது பெருமளவில் வைரலாகப் பரவிவருகிறது. இதைப்போன்று, கன்னியாகுமரி மாவட்டம், அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கலைக்கல்லூரியில் பணிபுரியும் தமிழ் பேராசிரியர் செந்தில்குமார், எம்.ஜி.ஆர்., சிவாஜி ஆகியோர் நடிப்பில் வெளியான திரைப்படங்களில் உள்ள பாடல்கள் மெட்டில் கரோனா வைரஸ் தொற்று விழிப்புணர்வு பாடலை பாடி வெளியிட்டுள்ளார்.
இந்தப் பாடலை குமரி மாவட்ட மக்கள் சமூகவலைதளங்களில் வேகமாகப் பதிவிட்டு பகிர்ந்து வருகின்றனர். இந்தப் பாடல் தற்போது சமூகவலைதளத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றுவருகிறது.