கன்னியாகுமரி:குழித்துறை அருகேவுள்ள மடிச்சல் பகுதியைச் சேர்ந்தவர் முத்தையன் (70). கூலித்தொழிலாளியான இவர் நேற்றிரவு (செப்.3) குழித்துறை சந்திப்பு பகுதியில் செயல்பட்டு வரும் மதுபானக்கடையில் மது குடிக்கச் சென்றார். இவருடன் பிரஜித் என்ற இளைஞரும் மது குடிக்க வந்துள்ளார். இந்நிலையில் இருவரும் அதிகளவு மது குடித்துவிட்டு தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
போதையில் இருவரும் கடையில் இருந்து இறங்கி சாலை வழியாக தள்ளுமுள்ளில் ஈடுபட்டவாறு நடந்து சென்ற போது, பிரஜித் முதியவரை பிடித்து கீழே தள்ளியதாக கூறப்படுகிறது. இதில் நிலைதடுமாறிய முத்தையன், அரசுப் பேருந்தின் சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.