தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மிட்டாய் வாங்கித் தருவதாகக் கூறி சிறுமிக்கு பாலியல் தொல்லை - முதியவர் கைது - சிறுமிக்கு முதியவர் பாலியல் தொல்லை

கன்னியாகுமரி: நாகர்கோவில் அருகே 5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவரை, மகளிர் காவலர்கள் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

Old man arrested under pocso for harassing school girl
சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவர் கைது

By

Published : Jul 23, 2020, 10:19 AM IST

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அடுத்த ஆசாரிபள்ளம் பகுதியைச் சேர்ந்தவர் ஜெயினுலாபுதீன்(69). இவர் அதே பகுதியைச் சேர்ந்த யு.கே.ஜி. படிக்கும் 5 வயது சிறுமியை மிட்டாய் வாங்கித் தருவதாகக் கூறி, அழைத்துச் சென்றுள்ளார்.

பின்னர் அந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு பொதுமக்கள் அங்கு திரண்டனர். இதனைத்தொடர்ந்து பொதுமக்களிடம் கையும் களவுமாக முதியவர் சிக்கிக்கொண்டார்.

இது குறித்து சிறுமியின் பெற்றோர் நாகர்கோவில் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் அடிப்படையில் ஜெயினுலாபுதீன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து காவலர்கள் அவரை கைது செய்தனர்.

இதையும் படிங்க: வாணியம்பாடியில் சிறுமி பலாத்காரம்: போக்சோவில் சிறுவன் கைது!

ABOUT THE AUTHOR

...view details