தமிழ்நாடு - கேரளா எல்லை பகுதியான கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள களியக்காவிளை பேரூராட்சிக்கு சொந்தமான இடத்தில் மிகவும் பழமை வாய்ந்த சந்தை உள்ளது. இந்த சந்தையை அருகிலேயே பேருந்து நிலையமும் உள்ளதால், குமரி மாவட்டம் மட்டுமல்லாமல் கேரளாவில் இருந்தும் தினமும் பல்லாயிரக்கணக்கான பொதுமக்களும், வியாபாரிகளும் பொருட்களை வாங்கி செல்ல ஆர்வம் காட்டுகின்றனர்.
ஓட்டம் சத்திரம், ஓசூர், நெல்லை உள்ளிட்ட தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் காய்கறிகள், வாழை தார்கள் மட்டுமின்றி உள்ளூரில் விளையும், கிழங்கு, கீரை, உள்ளிட்ட பொருட்களும் இங்கு கொண்டுவரப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் ஆடு, கோழி உள்ளிட்ட கால்நடைகள், மீன்களும் விற்பனை செய்யப்படுகிறது.