தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஆஞ்சநேயர் ஜெயந்தி; தாணுமாலய சுவாமி கோயில் பக்தர்களுக்கு வழங்க 1.5 லட்சம் லட்டுகள் ரெடி - Kanyakumari

புகழ்பெற்ற சுசீந்திரம் தாணுமாலயன்சுவாமி கோயிலில் ஆஞ்சநேயர் ஜெயந்தி விழாவையொட்டி பக்தர்களுக்கு வழங்க ஒன்றரை லட்சம் லட்டுகள் தயார் செய்யும் பணி நடந்து வருகிறது.

ஆஞ்சநேயர் ஜெயந்தி; தாணுமாலய சுவாமி கோயில் பக்தர்களுக்கு வழங்க ஒன்றரை லட்சம் லட்டுகள்
ஆஞ்சநேயர் ஜெயந்தி; தாணுமாலய சுவாமி கோயில் பக்தர்களுக்கு வழங்க ஒன்றரை லட்சம் லட்டுகள்

By

Published : Dec 20, 2022, 10:03 PM IST

ஆஞ்சநேயர் ஜெயந்தி; தாணுமாலய சுவாமி கோயில் பக்தர்களுக்கு வழங்க ஒன்றரை லட்சம் லட்டுகள்

கன்னியாகுமரி:பிரசித்திபெற்ற சுசீந்திரம் தாணுமாலயன் சுவாமி திருக்கோயிலில் உள்ள 18 அடி உயரம் கொண்ட விஸ்வரூப ஆஞ்சநேயர் பக்தர்கள் மத்தியில் மிகவும் பிரசித்திபெற்றவர். நாடு முழுவதும் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகளும் பக்தர்களும் ஆஞ்சநேயர் சுவாமியை தரிசனம் செய்யாமல் செல்வது இல்லை.

அத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த ஆஞ்சநேயர் சுவாமிக்கு ஒவ்வொரு ஆண்டும் மார்கழி மாதம் மூல நட்சத்திரத்தில் ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் இந்த ஆண்டிற்கான ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா வரும் 23ஆம் தேதி நடைபெறுகிறது.

ஆஞ்சநேயர் ஜெயந்தி அன்று இந்த விக்கிரகத்திற்கு பல்வேறு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்று பொதுமக்களுக்கு பிரசாதமாக லட்டு வழங்கப்படுவது வழக்கம். ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொள்ளும் இந்த நிகழ்வில் பிரசாதமாக வழங்க லட்டு தயாரிக்கும் பணிகள் துவங்கி உள்ளன.

இதற்காக காங்கேயத்திலிருந்து பணியாளர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர். சுமார் ஒன்றரை இலட்சத்தும் மேற்பட்ட லட்டுகள் தயாரிக்கும் பணியில் பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

இதையும் படிங்க:ஜல்லிக்கட்டு: காளையர்களை சமாளிக்க காளைகளுக்கு கடும் பயிற்சி

ABOUT THE AUTHOR

...view details