கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் தமிழ்நாடு அரசு நர்சுகள் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இது குறித்து தமிழ்நாடு அரசு நர்சுகள் சங்க மாநில இணை செயலாளர் ஜீவா ஸ்டாலின் கூறியதாவது, "தமிழ்நாடு அரசு நர்சுகள் சங்கம் சார்பில் இன்று (ஜன.29) மாநிலம் தழுவிய போராட்டம் நடைபெற்று வருகிறது. மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம், மாநில செவிலியர்களுக்கு வழங்கப்பட வேண்டும்.