தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

"மூடிய டாஸ்மாக்கை திறப்பதா??"- நாம் தமிழர் கட்சி எதிர்ப்பு - மதுபானக்கடை

கன்னியாகுமரி: மூடிய மதுபானக்கடையை திறக்க முயன்றதால், 'நாம் தமிழர் கட்சி' சார்பாக கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.

மூடிய டாஸ்மாக்கை திறப்பதா?? நாம் தமிழர் கட்சி எதிர்ப்பு!

By

Published : Aug 15, 2019, 11:57 PM IST

தமிழ்நாடு அரசால், மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள மதுபானக்கடைகளை மூட உத்தரவு வந்ததைத் தொடர்ந்து, கன்னியாகுமரி மாவட்டம் ஆற்றூர் பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் இரண்டு மதுபானக்கடைகள் மூடப்பட்டன.

இந்நிலையில் மூடப்பட்ட மதுபானக்கடைகளை மீண்டும் திறக்க டாஸ்மாக் தரப்பில் நடவடிக்கை எடுப்பதாக தெரியவந்துள்ளது.

மூடிய டாஸ்மாக்கை திறப்பதா?? நாம் தமிழர் கட்சி எதிர்ப்பு!

இதைத்தொடர்ந்து, ஆற்றூர் பகுதியில் மதுபானகடையை திறக்கக் கூடாது என வலியுறுத்தி, நாம் தமிழர் கட்சியினர் வீடு வீடாக சென்று 10-ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்களின் கையெழுத்தை பெற்று மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைத்தனர்.

ABOUT THE AUTHOR

...view details