கன்னியாகுமரி மாவட்டத்தில் கொலை , கொள்ளை போன்ற சம்பவங்கள் நடந்த வண்ணம் உள்ளன ஆளில்லாத வீடுகளில் பகல் நேரங்களில் நோட்டமிட்டு இரவு நேரங்களில் கொள்ளையர்கள் கைவரி காட்டி வருகின்றனர் மேலும் குறி சொல்வதைப் போல வீடுகளுக்கு சென்று அவர்களை ஏமாற்றி அங்கு இருக்கும் பணம் மற்றும் நகைகளையும் கொள்ளையடித்து சென்று விடுகின்றனர்
இந்நிலையில் மாவட்டத்தில் குலசேகரம் , அருமனை, திருவட்டார் , மார்த்தாண்டம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ரப்பர் குடோன்களிலிருந்து ரப்பர் ஷீட்டுகள் தொடர்ச்சியாக கொள்ளையடிக்கபட்டுவந்தது இதேபோல் பல்வேறு பகுதிகளில் இருந்து வெண்கல பாத்திரங்களும் மர்மநபர்களால் தொடர்ச்சியாக கொள்ளை போனது இதுகுறித்து பல்வேறு காவல் நிலையங்களில் புகார்கள் வந்த வண்ணம் இருந்தன குறிப்பாக திருவட்டார் மற்றும் குலசேகரம் காவல்நிலையங்களில் புகார்கள் அதிக அளவில் உள்ளன.
இந்த புகார்கள் அடிப்படையில் போலீசார் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்கள் மூலமாக விசாரணை செய்து வந்தனர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹரி கிரண் பிரசாத் உத்தரவின் பெயரில் தனிப்படை அமைக்கப்பட்டு சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் விசாரணையை தீவிரப்படுத்தினர் இந்நிலையில் மார்த்தாண்டம் தனியார் மதுபான விடுதியில் கொள்ளையர்கள் இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது இந்த தகவலின் அடிப்படையில் அங்கு சென்ற தனிப்படை போலீசார் மது அருந்தி
கொண்டிருந்த கொள்ளையர்களை
சுற்றிவளைத்து கைது செய்தனர் இதில் முக்கிய கொள்ளையன் திற்பரப்பு ஜெகன் மற்றும் அவரது கூட்டாளிகளான தென்தாமரைக்குளம் பகுதியை சேர்ந்த கார்த்திக்செல்வம் , செம்மாங்காலை பகுதியை சேர்ந்த கிளைன் , மற்றும் காப்புகாடு மாராயபுரம் பகுதியை சேந்ந்த மகேந்திரகுமார் உள்ளிட்ட நான்கு பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர் விசாரனையில் அவர்களிடமிருந்து பல்வேறு பகுதிகளில் கொள்ளையடிக்கபட்ட 1100கிலோ ரப்பர் ஷீட்களும் 275 கிலோ வெண்கல பாத்திரங்கள் இரண்டு இருசக்கர வாகனம் மற்றும் கொள்ளையடிக்க பயன்படுத்திய கார் ஆகியவை பறிமுதல் செய்யபட்டது தொடர்ந்து கொள்ளையர்கள் ஜெகன் மற்றும் கார்த்திக்செல்வன் ஆகியோரை குலசேகரம் காவல்நிலையத்திலும் , கிளைன் மற்றும் மகேந்திரகுமார் ஆகியோரை திருவட்டார் காவல்நிலையத்திலும் தனிபடை காவல்துறையினர் ஒப்படைத்தனர் . இவர்கள் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் கொள்ளையர்களை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்
இந்நிலையில் இந்த கொள்ளை சம்பவங்களுக்கு மூளையாக செயல்பட்டது ஒரு வழக்கறிஞர் என்றும் அந்த வழக்கறிஞரின் கட்டுப்பாட்டில் கொள்ளையடிக்க பயன்படுத்தபட்ட மினி டெம்போ வாகனம் பாதுகாப்பில் உளளதாகவும் அதை மீட்க முடியாமல் காவல் துறையினர் திணறி வருவதாகவும்
இந்த கொள்ளை சம்பவங்களுக்கு வழக்கறிஞர் தான் முக்கிய காரணமானவர் என்றும் காவல்துறை வட்டாரத்தில் இருந்து தகவல்கள் வெளிவந்துள்ளது கடந்த சில மாதங்களாக தொடர் கொள்ளையில் ஈடுபட்ட முக்கிய கொள்ளையர்கள் கைது செய்யபட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: நடிகர் அஜித்தின் தந்தை காலமானார்