மத்திய அரசின் புதிய வேளாண் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் கையெழுத்து இயக்கத்தில் ஈடுபட்டுள்ளனர். அதையொட்டி நாகர்கோவிலில் மறைந்த நாடாளுமன்ற உறுப்பினர் வசந்தகுமாரின் மகனும் நடிகருமான விஜய் வசந்த் தலைமையில், காங்கிரஸ் கட்சியினர் இன்று (அக்டோபர் 24) வியாபாரிகள், பொதுமக்களிடம் கையெழுத்துகளை பெற்றனர்.
அடிக்கடி கட்சி மாறும் குஷ்புவால் எந்த மாற்றமும் நிகழாது - நடிகர் விஜய் வசந்த்! - நடிகர் விஜய் வசந்த்
கன்னியாகுமரி: நான்காண்டுகளுக்கு ஒரு முறை கட்சி மாறும் நடிகை குஷ்புவால் தமிழ்நாட்டில் எந்த மாற்றமும் நிகழாது என நடிகர் விஜய் வசந்த் விமர்சித்துள்ளார்.
vasanth
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய விஜய் வசந்த், ”மத்திய அரசின் புதிய வேளாண் சட்டத்தால், உற்பத்தி செய்த பொருளின் விலையை விவசாயி நிர்ணயிக்க முடியாத நிலையும், முழுமையான பயனை விவசாயி பெற முடியாத நிலையும் உருவாகியுள்ளது. நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை கட்சி மாறும் நடிகை குஷ்பு, தான் சார்ந்துள்ள கட்சிக்காக விசுவாசமாக பேசி வருகிறார். அதனால் தமிழ்நாட்டில் எந்த மாற்றமும் நிகழாது“ எனக் கூறினார்.
இதையும் படிங்க: நாளைய முதல்வரே! இளம் தலைவரே! விஜய் போஸ்டர்!