கன்னியாகுமரி:மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக் கோரி பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் டெல்லியில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அவர்களுக்கு ஆதரவு தெரிவித்து இந்தியாவின் தென்கோடி எல்லையான கன்னியாகுமரியில் இருந்து டெல்லி வரை மிதிவண்டிப் பேரணி நடத்த வடமாநில விவசாயிகள் திட்டமிட்டனர். ஆனால், இந்த மிதிவண்டிப் பேரணிக்கு காவல் துறையினர் அனுமதி வழங்கவில்லை.