குமரி மாவட்டம் நாகர்கோவிலில் வடகிழக்குப் பருவ மழையை எதிர்கொள்ளும் நோக்கில் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை சார்பில், சுங்கான்கடை அருகேவுள்ள கருப்பு கோடு குளத்தில் முன்னெச்சரிக்கை வெள்ள அபாய ஒத்திகை பயிற்சி நடைபெற்றது. இந்த ஒத்திகை பயிற்சிக்கு மாவட்ட ஆட்சியர் அரவிந்த் தலைமை தாங்கினார்.
இதில் வெள்ளத்தில் சிக்கியவர்களை உடனடியாக மீட்டு, மருத்துவர்களின் உதவியுடன் முதலுதவி செய்து மருத்துவமனைக்கு அனுப்பிவைப்பது போன்ற செயல்முறைகள் ஒத்திகை பார்க்கப்பட்டது.
மேலும் வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் சிக்கிக் கொண்ட பொதுமக்கள், எரிவாயு சிலிண்டர், பயனற்ற தண்ணீர் பாட்டில்கள், வாழைத்தண்டு, பிளாஸ்டிக் குடம், தேங்காய் நெற்று போன்ற பொருள்களைக் கொண்டு தங்களை எவ்வாறு காப்பாற்றிக் கொள்வது என செய்து காண்பிக்கப்பட்டது.
அதுமட்டுமின்றி ரப்பர் படகு மூலம் வயதானவர்கள் பெண்கள் மற்றும் கால்நடைகளை காப்பாற்றுவது எப்படி என்றும் செய்து காண்பித்தனர். மேலும் தண்ணீரில் மூழ்கி உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளவர்களுக்கு எவ்வாறு முதலுதவி செய்து காப்பாற்றுவது என்றும் ஒத்திகை நிகழ்த்தப்பட்டது.
இதையும் படிங்க: கோவில்பட்டியில் ரேஷன் அரிசி கடத்தல்: 3 பேர் கைது