கன்னியாகுமரி மாவட்டம் புலியூர் குறிச்சி பகுதியில் பூச்செடிகள் விற்பனை செய்யும் சிந்துஜா நர்சரி கார்டன் செயல்பட்டு வருகிறது. இந்த நர்சரியில் கடந்த எட்டு மாதங்களாக மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த தர்போஸ் (25) எனும் இளைஞர் தங்கி வேலை பார்த்து வந்தார்.
இந்நிலையில், நேற்று நள்ளிரவு தோட்டத்தின் பின்புறமுள்ள காட்டுப்பகுதியில் இவர் சந்தேகத்திற்கிடமான முறையில் தூக்கிட்ட நிலையில் கிடந்தார். காலையில் உடலைப் பார்த்த நர்சரி ஊழியர்கள், காவல் துறையினருக்குத் தகவல் கொடுத்தனர்.
இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்குச் சென்ற தக்கலைக் காவலர்கள், அவரது உடலைக் கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
கன்னியாகுமரியில் வடமாநில இளைஞர் தூக்கிட்டு தற்கொலை: போலீஸார் தீவிர விசாரணை - வடமாநில இளைஞர் தூக்கிட்டு தற்கொலை
கன்னியாகுமரி : புலியூர் குறிச்சி அருகே வடமாநில தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
தூக்கிட்டு தற்கொலை
மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வடமாநில இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சக ஊழியர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க:போரூரில் கொடூரமாக இளைஞர் படுகொலை!
Last Updated : Aug 27, 2020, 3:40 PM IST