குமரி மாவட்டம் நாகர்கோவிலில் மாநகராட்சி சார்பாக மகாராஜா அவிட்டம் திருநாள் நினைவு காப்பக மைதானத்தில் ஒவ்வொரு ஆண்டும் கோடை விடுமுறையையொட்டி பொருட்காட்சி நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான பொருட்காட்சியை திட்டுவிளை பகுதியை சேர்ந்த ஃபாரூக் நடத்தி வந்தார். கடந்த இரண்டு மாதங்களாக நடைபெற்று வந்த பொருட்காட்சி நேற்றுடன் நிறைவடைந்தது.
ராட்சத ராட்டினம் அகற்றும் பணி: வடமாநில வாலிபர் உயிரிழப்பு! - kanniyakumari
கன்னியாகுமரி: நாகர்கோவிலில் கோடை விடுமுறையை முன்னிட்டு போடப்பட்ட பொருட்காட்சி நிறைவு பெற்றதையடுத்து, ராட்சத கேளிக்கை ராட்டினங்கள் அகற்றுகையில் வடமாநில வாலிபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
![ராட்சத ராட்டினம் அகற்றும் பணி: வடமாநில வாலிபர் உயிரிழப்பு!](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-3633766-37-3633766-1561206129017.jpg)
இதனையடுத்து பொருட்காட்சியில் அமைக்கப்பட்ட கேளிக்கை ராட்டினங்கள், விளையாட்டு எந்திரங்கள் ஆகியவற்றை அகற்றும் பணி நடைபெற்றது. இந்த பணியில் வடமாநில தொழிலாளர்கள் ஈடுபட்டனர். அப்போது அமைக்கப்பட்டிருந்த ராட்சத ராட்டினங்களை அகற்றும் பணியில் ஜார்ஜண்ட் மாநிலத்தை சேர்ந்த சோக்ரென் மாராண்டி(32) என்ற இளைஞர் ஈடுபட்டுள்ளார்.
அப்போது திடீரென யாரும் எதிர்பாராத வகையில் மேலிருந்து கீழே விழுந்தார். அதில் பலத்த காயமடைந்த அவரை, மற்ற தொழிலாளர்கள் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர், அஞ்கு அவருக்கு சிகிச்சையளித்த மருத்துவர்கள் சோக்ரென் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக கோட்டாறு காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.