கன்னியாகுமரி:தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தினர் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்பாட்டம் செய்தனர். அதில், தமிழ்நாடு முழுவதும் அரசு பள்ளிகளில் சத்துணவு உண்ணும் மாணவர்களுக்கு காலையில் சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை அரசு அறிவித்துள்ளது.
அதனை சத்துணவு ஊழியர்களின் சமையல் செய்யாமல் வெளியில் உள்ள நபர்கள் சமையல் செய்து கொண்டு வந்து கொடுக்கும் வகையில் இந்த திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதற்கு தமிழ்நாடு முழுவதும் சத்துணவு ஊழியர் சங்கத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சத்துணவு பெண் ஊழியர்கள் சத்துணவு மையத்தில் படிக்கும் குழந்தைகளுக்குத் தேவையான சமையல் செய்து சத்துணவு ஊழியர்களே கொடுப்பது அவர்கள் வீடுகளில் சாப்பிட்டது போலவே ஆரோக்கியமாக இருந்து வந்தது. வெளிய உள்ள நபர்கள் சமையல் செய்து கொண்டு வந்து கொடுத்து விடுவார்கள். குழந்தைகளுக்கு ஏதேனும் உணவு சாப்பிட்டதன் மூலம் பிரச்சினை ஏற்பட்டால் மிகப்பெரிய பாதிப்புகள் ஏற்படும்.
எனவே வெளி நபர்கள் சமைத்து தருவதை மாற்றி சத்துணவு ஊழியர்களே அதை சமைத்து குழந்தைகளுக்கு வழங்கும் வகையில் திட்டத்தை அமுல்படுத்த வேண்டும். காலி பணியிடங்கள் நிரப்ப வேண்டும், ஊய்வூதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தப்பட்டது.
இதையும் படிங்க:கொப்பரை தேங்காய் விலை ஏற்றம் குறித்து எம்பி சண்முகசுந்தரம் தலைமையில் ஆலோசனைக் கூட்டம்