தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மாலத்தீவு அடுக்குமாடி குடியிருப்பு தீ விபத்து; தமிழகத்தைச் சேர்ந்த மூவர் உட்பட 9 இந்தியர்கள் பலி..! - திருவண்ணாமலை

மாலத்தீவு அடுக்குமாடு குடியிருப்பு தீ விபத்தில் தமிழகத்தைச் சேர்ந்த மூவர், ஆந்திரா, பெங்களூரை சேர்ந்தவர்கள் என 9 பேர் பலியாகியுள்ளனர்.

மாலத்தீவு அடுக்குமாடி குடியிருப்பு தீ விபத்து
மாலத்தீவு அடுக்குமாடி குடியிருப்பு தீ விபத்து

By

Published : Nov 11, 2022, 9:31 AM IST

கன்னியாகுமரி: மாலத்தீவு தலைநகர் மாலேயில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் இந்தியர்கள் உள்பட வெளிநாட்டு தொழிலாளர்கள் பலர் தங்கியிருந்தனர். கட்டடத்தின் தரைத்தளத்தில் வாகனங்கள் பழுது பார்க்கும் கடை இயங்கி வந்தது. நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் வேலை முடித்துவிட்டு அனைவரும் தங்களது குடியிருப்பில் உறங்கி கொண்டிருந்தனர்.

இந்நிலையில் நேற்று அதிகாலையில் தரைத்தளத்தில் உள்ள வாகனங்கள் பழுதுபார்க்கும் கடையில் திடீரென தீப்பிடித்தது. இந்த தீ அதிவேகத்தில் மேலத்தளத்துக்கும் பரவியது. கட்டிடம் முழுவதும் தீ பரவியதால் அங்கு கரும்புகை மண்டலம் எழுந்தது. குடியிருப்பில் இருந்தவர்கள் உறங்கிக் கொண்டிருந்ததாலும், நெரிசலான இடத்தில் உள்ள கட்டடம் என்பதாலும் அவர்களால் உடனடியாக கட்டடத்தில் இருந்து வெளியேற்ற முடியவில்லை.

விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை அணைத்தனர். இருப்பினும் இந்த தீ விபத்தில் 9 இந்தியர்கள் 1 வங்காள தேச நாட்டைச் சேர்ந்தவர் என 10 பேர் பலியாகினர். மேலும் பலர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். காயமடைந்தவர்களிலும் பல இந்தியர்கள் இருக்கலாம் என கருதப்படுகிறது.

தமிழகத்தைச் சேர்ந்த மூவர் உட்பட 9 இந்தியர்கள் பலி

இந்த தீ விபத்தில், கன்னியாகுமரி மாவட்டம் மாவட்டம் காஞ்சிரகோடு பகுதியை சேர்ந்த ஜெனில், இவர் ஆந்திராவை சேர்ந்த சுந்தரி என்ற பெண்ணை திருமணம் செய்து அங்கு வாழ்ந்து வந்தார். விபத்தில் கணவன் மனைவி இரண்டு பேரும் பலியானதாக தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் திருவண்ணாமலையை சேர்ந்த தேன்மொழி என்பவர் அங்கு ஒப்பந்ததாரராக பணியாற்றி வந்துள்ளார். இவரும் தீவிபத்தில் பாலியாகியுள்ளார். தீ விபத்தில் பலியானவர்கள் உடலை அடையாளம் காண்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. தற்போது உடல்களை அடையாளம் காணும் பணிகள் நடந்து வருகிறது.

மேலும் ஆந்திராவைச் சேர்ந்த 5 பேர், பெங்களூருவைச் சேர்ந்த ஒருவர் என மொத்தம் 9 இந்தியர்கள் பலியாகி உள்ளனர். இந்நிலையில் கன்னியாகுமரியை சேர்ந்தவர் மனைவியுடன் தீ விபத்தில் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க:தாக்குதல் நடத்த ஆன்லைன் மூலம் வெடிபொருட்கள் வாங்கியதாக என்.ஐ.ஏ தகவல்!

ABOUT THE AUTHOR

...view details