தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

புத்தாண்டு தினத்தில் பைக் ரேஸ் சென்றால் கைது - மாவட்ட எஸ்.பி. எச்சரிக்கை - மாவட்ட எஸ்.பி. எச்சரிக்கை

கன்னியாகுமரி: புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது இருசக்கர வாகனம், கார் போன்றவற்றில் ரேஸிங் சென்றாலோ, குடித்துவிட்டு வாகனம் ஓட்டினாலோ ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்பட்டும் என மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஸ்ரீநாத் தெரிவித்துள்ளார்.

மாவட்ட எஸ்.பி. எச்சரிக்கை
மாவட்ட எஸ்.பி. எச்சரிக்கை

By

Published : Dec 31, 2019, 7:19 PM IST


நாடு முழுவதும் இன்று இரவு புத்தாண்டு கொண்டாடப்பட உள்ளது. சர்வதேச சுற்றுலா மையமான கன்னியாகுமரியில் புத்தாண்டை கொண்டாட சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர். இதனால், சாலைகளில் இன்று மாலை முதல் வாகன நெருக்கடி அதிகரித்துள்ளது. புத்தாண்டு உற்சாகத்தில் இளைஞர்கள் கார், பைக்குகளில் வேகமாக சென்ற வண்ணம் உள்ளனர்.

இதனிடையே, இதுகுறித்து மாவட்ட எஸ்.பி. ஸ்ரீநாத் கூறுகையில், "புத்தாண்டை மிகவும் பாதுகாப்பாக கொண்டாட வேண்டும். சாலைகளில் கார், பைக் போன்ற வாகனங்களில் ரேஸ் செல்லக்கூடாது. மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டக்கூடாது. இவ்வாறு செய்தால் அவர்களின் ஓட்டுனர் உரிமம் ரத்து செய்யப்படும்" என்றார்.

மாவட்ட எஸ்.பி. எச்சரிக்கை

மேலும், புத்தாண்டை முன்னிட்டு பொதுமக்களின் பாதுகாப்பிற்காக குமரி மாவட்டம் முழுவதும் ஆயிரத்து 500 காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் எனவும் அவர் கூறினார்.

ABOUT THE AUTHOR

...view details